Wednesday, 31 December 2025

திரைப்படக்கலை பற்றிய உங்களுக்கு தெரியாத சுவாரசியமான உண்மைகள்

அந்த காலத்திலிருந்து திரைப்படம் எப்படி எல்லாம் உருவானது என்பதை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம். இப்பொழுது திரைப்படங்களைப் பற்றிய அரிய பல சுவாரஸ்ய உண்மைகளை பார்ப்போம்.

  1. உலகில் ஒளிப்படக்கலை தோன்றிய பிறகே திரைப்படக்கலை தோன்றியது. முதன்முதலில் ஒளிப்படக் கேமராவை 1553இல் பாப்டிஸ்டா போட்டா என்பவர் கண்டுபிடிந்தார்.
  2. படம்பிடிக்கும் தகடுகள், காகிதங்கள் ஆகியவற்றிற்குப் பதிலாக, செல்லுலாய்டு பிலிமை ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர் 1888இல் கண்டுபிடித்தார்.
  3. லேலண்டு ஸ்டான்ஃபோர்டு என்ற கலிஃபோர்னியா மாநிலக் கவர்னர் குதிரைப் பந்தயம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் தோன்றிய சந்தேகமே திரைப்படம் பிறக்க வித்தாக அமைந்தது. எட்வர்டு ஜே. மேபிரிட்ஜ் என்பவர் குதிரைகளை 24 கேமராக்களால் படம் பிடித்ததே கவர்னரின் சந்தேகமும் தீர்ந்து, திரைப்படமும் பிறக்கக் காரணமானது.
  4. எட்வர்டு மேபிரிட்ஜுக்கு முன்னரே பல நாட்டு அறிஞர்கள், அசையாப் படங்களை வைத்துச் சலனப் பட விளையாட்டுக் கருவிகளைச் செய்து பயாஸ்கோப், ஸோயிட்ரோப் காட்டினர். பினாக்கிஸ்டோஸ்கோப், சினிமாட்டோஸ்கோப், ஸுபிராக்ஸினோ ஸ்கோப் முதலியன அவற்றுள் சில.
  5. நம் கண்ணைப் பார்த்து வடிவமைத்ததுதான் கேமரா. 'கேமரா' என்ற சொல் 'இருட்டறை' என்று பொருள்படும்.
  6. பார்வையின் நிலைத்த தன்மை' (Persistence of Vision) என்ற குணம் மனிதக் கண்களுக்கே உரிய தனிச் சிறப்பானது ஆகும். அதன் கால அளவு அரைக்கால் வினாடிக்கும் பாதி நேரம் ஆகும். அதாவது, 1/16 வினாடி நேரம். வினாடிக்கு 16 படங்கள் எடுக்கும் கேமராவால்தான் திரைப்படம் பிடிக்க முடியும்.
  7.  திரைப்படக் கேமராவைக் கண்டு பிடிக்கும் சவால்களை எதிர்கொண்ட முன்னோடிகளுள் முக்கியமானவர் பிரெஞ்சு நாட்டு டாக்டர் ஜூல்ஸ் மாரே. அமெரிக்காவில் வாழ்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் சி.ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ் ஆகியோர் ஆவர்.
  8. பிரான்சு நாட்டினரான லூயிஸ் லூமியர், அகஸ்டி லூமியர் என்னும் லூமியர் சகோதரர்கள் பாரீஸ் மாநகரில் 1895 டிசம்பர் மாதம் 28ஆம் நாள் மக்கள் முன் திரைப்படம் காட்டினர். இந்த நாளே உலகில் முதன்முதலாகத் திரைப்படம் காட்டப்பட்ட நாளாகும்.
  9. லூமியர் சகோதரர்கள் பாரீஸில் 1895ஆம் ஆண்டில் காட்டியது முதல், 32 ஆண்டுக் காலம் உலகத் திரைப்பட வரலாற்றில் 'மௌனத் திரைப்படக் காலம்' (Silent Era) ஆகும்.
  10. லூமியர் சதோதரர்களின் குறும்படங்கள் உலகெங்கும் கிளர்ச்சியை உருவாக்கின. லண்டனில் ராபர்ட் டபிள்யூ பால் என்பவர் 1896ஆம் ஆண்டில் பல குறும்படங்களைத் திரையிட்டுக் காட்டினார். அவரே கி.பி. 1920இல், தான் தயாரித்த அனைத்துத் திரைப்படங்களையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டார்.
  11. வீரசாகசங்கள், குத்துச் சண்டைகள், நடனக் காட்சிகள் முதலிய கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் மௌனத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
  12. ஜார்ஜ் மெலெ என்பவர் 1903இல் தயாரித்தளித்த தேவதைகளின் ராஜியம்' (The Kingdom of the fairies) என்ற திரைப்படம் தந்திரக்காட்சிகள் நிறைந்தது. 1904ஆம் ஆண்டு வெளிவந்த 'மிகப் பெரிய ரயில் கொள்ளை ' (The Great Train Robbery) என்ற படம் எட்வின் போர்ட்டர்தயாரித்த மிகப் புகழ் பெற்ற திரைப்படமாகும்.
  13. மௌனப்படக் காலத்தில் சார்லி சாப்ளின் நடித்தும் இயக்கியும் தயாரித்தும் அளித்தத் திரைப்படங்களில் தி கிட் (The Kid), தி கோல்டு ரஷ் (The Gold Rush), தி சர்க்கஸ் (The Circus), சிட்டி லைட்ஸ் (City Lights) முதலியன பேசத்தக்க மௌனப் படங்கள் ஆகும்.
  14. திரைப்படத்தை எதிர்த்தனர். மத வெறியர்களால் விரட்டி அமெரிக்காவில் மதப் பிற்போக்குவாதிகள் சினிமாத்தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கப்பட்டனர். அதன் விளைவாக உருவானதே 'ஹாலிவுட்' நகரமாகும்.
  15. லூமியர் சகோதரர்கள் 1896ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி, பம்பாய் நகரில், 'வாட்சன் ஹோட்டல்' என்ற உணவு விடுதியின் பெரிய ஹாலில் தங்களின்' ஒரு ரயிலின் வருகை' முதலான குறும்படங்களை இந்தியர்களுக்குத் திரையிட்டுக் காட்டினர்.
  16. 1896ஆம் ஆண்டின் இறுதியில், டுபாண்ட் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற திரைப்படத்தை இந்தியாவின் பல ஊர்களிலும் காட்டினார். திருச்சி நகரில் அந்தப் படத்தைப் பார்த்த சாமிக்கண்ணு வின்சென்ட், அந்தப் படத்தையும் படம்காட்டும் கருவியையும் டுபாண்டிடமிருந்து விலைக்கு வாங்கினார். ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊர்ஊராகச் சென்று அப்படத்தைப் போட்டுக் காட்டினார்.
  17. சாமிக்கண்ணு வின்சென்ட் 1914இல் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் 'வெரைட்டி ஹால்' (Variety Hall) என்ற பெயரில் ஒரு நிரந்தரத் திரையரங்கத்தை அமைத்தார்.
  18. ஆர்ஜி டர்னி என்ற இந்திய இயக்குநர் புண்டலிக்' (Pundalik) என்ற மராத்தி நாடகத்தை அது மேடையில் நடிக்கப்பட்ட நிலையில் கேமராவால் படம் பிடித்தார். இதை இந்தியாவின் முதல் திரைப்படம் என்று சிலர் குறிப்பிடுவர். அது தவறு. உண்மையில் தாதாசாகிப் பால்கே 1913இல் தயாரித்து வெளியிட்ட 'ராஜா ஹரிச்சந்திரா' என்பதே இந்தியர் தயாரித்து வெளிவந்த முதல் இந்தியத் திரைப்படம்.
  19. இந்திய மௌனப் படங்களை வளர்த்த சில முக்கிய நபர்கள் ஜார்ஜ் மேலீஸ். டி.ஜி. கங்குலி (கல்கத்தா), சந்துலால் (மும்பை), ஹிமான்சு ராய் முதலியோர் ஆவர்.
  20. தமிழ்நாட்டில் முதல் மௌனப்பட இயக்குநர் என்ற பெருமைக்கு உரியவர் ஆர். நடராஜ முதலியார். இவர் 1916இல் சென்னைக் கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் பிலிம் கம்பெனி' என்ற திரைப்பட சாலையில் 'இந்தியா நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் தயாரித்த முதல் மௌனத் திரைப்படம் 'கீசக வதம்' 1917இல் வெளிவந்தது.
  21. தென்னிந்தியாவில் மௌனப் படக்காலத்தில், அதாவது 1917 முதலாக 1931வரையிலும் கதை கூறும் மௌனத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
  22. "கேமரா லென்ஸ் முன்னால் நின்றால் அழகும் உடல்நலமும் கெட்டுவிடும்' என்ற மூடநம்பிக்கையால் ஆரம்பத்தில் பெண்கள் நடிக்க முன்வரவில்லை. எனினும், அந்த நிலையை ஆங்கிலோ இந்தியப் பெண்கள் முன்வந்து மாற்றினர். படங்களில் நடித்தால் அழகு கெட்டுப்போவதில்லை என அறிந்ததும் திரைப்படத்தில் நடிக்க ஒரு தமிழ்ப்பெண் முன்வந்தார். அவர்தான் தஞ்சை டி.பி.ராஜலட்சுமி.
  23. ஊமைப்படக் காலத்தில் 'கதைசொல்லிகள்' என்னும் ஒருவகைக் கலைஞர்கள் உருவாயினர். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இருட்டில் திரையோரமாக நின்றவாறே ஒலிபெருக்கிக் குழாய் மூலமாக உரத்த குரலில் காட்சிச் சூழலை வருணித்தும், சுவையான வசனத்தைப் பேசியும் கதைகூறுபவர்களே இந்தக் கதைசொல்லிகள்.
  24. உலக அரங்கில் மௌனப்படக் காலம் 1895 முதல் 1927 ஆகும். படச்சுருளில் ஒலியைச் சேர்க்கும் முயற்சிகள் 1857 முதலாகப் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டன.
  25. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் பேசும்படம் 1927இல் உருவாகி-1928இல் வெளிவந்த 'தி ஜாஸ் சிங்கர்' படம் முதல் தொடங்குகிறது.
  26. திரைமொழி அல்லது காட்சிமொழி என்றால் என்ன என்பதை அறிந்து பேசும்படம் வந்ததால் திரைமொழி என்ற நுட்பமான கலைவடிவம் சிதைந்துபோனது.
  27. இந்தியாவில் பேசும்படத்தின் அறிமுகம் 1829ஆம் ஆண்டு 'காதலின் இனிய கீதம்' என்று பொருள்படும் 'தி மெலடி ஆப் லவ்' படத்தின் வழியாக ஏற்பட்டது.
  28. இந்தியாவில் அர்தேஷிர் இரானி என்ற இந்தியரால் தயாரிக்கப்பட்ட முதல் பேசும்படம் ஆலம் ஆரா' (ஹிந்தி மொழிப்படம்) 1931 இல் மும்பையில் திரையிடப்பட்டது.
  29. 1931இல் தமிழ் மொழியின் முதல் பேசும்படம் 'காளிதாஸ்' வெளிவந்தது. அதே 'காளிதாஸ்' படம்தான் தெலுங்கு மொழியின் முதல் பேசும்படமும் ஆகும்.
  30. தமிழ் நாட்டில் பேசும்படம் தோன்றியதும் தமிழ் நாடகங்களில் இருந்த பாடத்தெரிந்த நடிகர்கள், வசனகர்த்தாக்கள், இசையமைப்பாளர்கள் முதலிய கலைஞர்கள் நாடகங்களை விட்டுவிட்டுத் திரைப்படங்களை நாடி ஓடினர். அதனால் தமிழ் நாடக வளர்ச்சித் தடைபட நேர்ந்தது.
திரைப்பட கலையில் பயன்படுத்தப்படும் அரிய பல சொற்களுக்கான கலைச் சொற்களை இப்பொழுது பார்ப்போம்.

சலனப்படம்

அசையாத படங்களை (Sull pictures) வைத்து அசைவதுபோன்ற பிரமையை ஏற்படுத்துவது சலனப் படம் ஆகும். ஆங்கிலத்தில் இதனை 'மூவி' (Movie) என்பர்.

கேமரா

'கேமரா' என்பது கிரேக்க மொழிச் சொல், இலத்தீன் மொழியிலும் இச்சொல் உண்டு, இதன் பொருள் 'இருட்டறை' (Dark chamber) என்பதாகும்.

பார்வையின் நிலைத்த தன்மை (Persistence of Vision) :

ஒரு குறிப்பிட்ட மிகச்சிறிதளவு நேரம்
நமது கண்ணை மூடி, உடனே திறந்து விட்டால், கண் மூடுவதற்கு முன் நாம் பார்த்த காட்சியை (இமைக்கும் அந்தக் கணநேரம்) தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போலவே, நிலைத்து நிறுத்தும் குணம் நம் கண்ணுக்கு உண்டு. அது பார்வையின் நிலைத்த தன்மை என்று கூறப்படும்.

மௌனப்படக் காலம் (Silent Era)

பேச்சு, இசை, ஒலி எதுவும் இல்லாமல் திரைப்படங்கள் வெளிவந்த காலம் (1895-1927)

குறும்படங்கள்

குறைந்த நேர அளவில், அதாவது முப்பது நிமிடத்திற்குள் ஓடி முடியும் சிறு படங்கள் (Short films) குறும்படங்கள் எனப்பட்டன.

போட்டோ நாடகம் (Photoplay) :

 இந்திய நாட்டில் திரைப்படம் பிடிக்கத் தொடங்கியபோது ஆரம்ப காலத்தில் மேடையில் ஆரம்ப காலத்தில் மேடையில் நிகழ்ந்த நாடகத்தை அப்படியே கேமராவில் படம்பிடித்து, அதனைத் திரைப்படம் என்று கூறத் தொடங்கினர்.போட்டோ நாடகம்' என அதைத் திரைப்படத் திறனாய்வாளர்கள் வருணித்தனர்.

சென்சார் போர்டு (Censor Board) :

ஆங்கில அரசு திரைத்தொழிலை நசுக்க நினைத்து, ஒரு திரைப்படம் திரையிடும்முன் அரசின் தணிக்கைக்குழு அதனைப் பார்த்து, அதில் நீக்க வேண்டியதை நீக்கித் திருந்தியது. அத்தகைய அதிகாரமுள்ள தணிக்கைக் குழு ' சென்சார் போர்டு' எனப்பட்டது. இந்திய ஆங்கில அரசு 1920இல் பம்பாய், கல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் சென்சார் போர்டு அலுவலகங்களைத் நகரங்களில் திறந்தது.

கதைசொல்லிகள் :

ஊமைப்படக் காலத்தில், திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, இருட்டில் திரை ஓரமாக நின்றவாறே ஒலிப்பெருக்கிக் குழாய் மூலமாக உரத்த குரலில் காட்சிச் சூழலை வருணித்தும், வசனத்தைப் பேசியும் கதை கூறுபவர்களே இந்தக் கதை சொல்லிகள்.

ஒலிப்பதிவு

திரைப்படச் சுருளில் படம் பதிந்துள்ள பகுதியின் ஓரத்தில், பாத்திரங்கள் பேசும் குரல், சப்தம். இசைமுதலிய ஒலிகளைப் பதிவு செய்யும் தொழில் நுட்பம் ஒலிப்பதிவு எனப்படும்.

திரைமொழி

திரைப்படத்தில் பாத்திரங்கள் வாய் நிறந்து பேசாமலேயே காட்சியமைப்பு, நடிகர்களின் அவிநயம், முகபாவம், தடிப்பு முதலிய காட்சிப் படிமக் கூறுகளால் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு கதை நிகழ்வினைப் புரிய வைக்கும் திறனையே திரைமொழி என்று கூறுகிறார்கள் அது காட்சிமொழி என்று சுட்டப்படும்.

Comments


EmoticonEmoticon